Wednesday, June 10, 2009

என்னைப் புரிய வைத்தாய்...

உன்னைக் கண்டதின் பின்
என் வாழ்விலும் ஓர் அர்த்தம்
உன் தோழமை கிடைத்ததின் பின்
எனக்குள்ளும் ஓர் உத்வேகம்

வாழ வேண்டும்... வாழ வேண்டும்..
எனக்காக நான் வாழ வேண்டும் என்று
வாழ்க்கையின் அர்த்தம் புரிய வைத்த உன்னை
காலம் முழுதும் நான் மறவேன்....

அடுத்தவர் சொத்து!


நம் உள்ளங்கள் நம் காதலை பேசிக்கொண்டாலும்

நம் உதடுகள் அதை பேச மறுக்கின்றன

காரணம்

இன்று நீ

இன்னொருத்தியின் சொந்தம்...

இது தான் காதல் என்பதா...???


உள்ளதை சொல்ல

உதடுகள் மறுக்கிறது


உள்ளத்தில் உதிப்பதை

சொல்லவும் - உண்மைதடுக்கிறது


இருந்தும்;

சொல்ல வந்ததை சொல்வதில்

உடன்பட்டது - உள்ளம் மட்டுமே


தினம் மனசாட்சியோடு பேசிக்கொள்கிறேன்

நான் - உன்னை

மானசீகமாக காதலிக்கிறேனென்று...

எமதடிமைகள்

சீதனம் கேட்க்கும் சீர் கெட்ட மனிதனே...
நீ என்ன மன்மதனா...?
இல்லை சூர்ய குமாரனா...?
கேவலம் - பெண்ணிடம் கையேந்தும்
பிச்சைக்காரனே...!
ஆணாய்ப் பிறந்த நீ
என்ன பாவம் செய்தாய்...?
பணம் கொடுத்து வாங்கப்படும்
கணவன் நீங்கள்
எமதடிமைகள்....!!!

முதிர் கன்னி


இளம் கன்னி ஆயினும் "கன்னி"

நானோர் முதிர் கன்னி


பணமெனும் பள்ளத்தாக்கில்

சிதைந்து விட்ட என் வாழ்க்கை


அழகிருந்தும் அவல நிலை

என்னைத் தேடி வந்ததுவே


படிப்பினில் நான் மேன்மை பெற்றும்

கல்யாணச் சந்தையில் விலை போகா

நானோர் முதிர் கன்னி...

விழித்தெழு தமிழா...

உள்ளொன்று இருக்க
புறமொன்று பேசும்
உயிர் கொல்லி - மனிதன்
உயிர் பெற்ற நாட்டில்
உண்மையை பேச
உயிர் கொடு தமிழா...!

தானென்ற அகந்தை
தரணியில் அழிய
தரம் கொண்ட மனிதனை - நல்
தலைவன் ஆக்கிட
போர் தொடு தமிழா...!

நல்லதை செய்ய
நாட்டிற்காய் வாழ
துணிந்தெழு தமிழா - நீயும்
விழித்தெழு தமிழா...!

தென்றல்


சில நேரம் இதமாய்

பல நேரம் புயலாய்

வருகிறாய் - என்னைத் தேடி
உணர்ச்சி ததும்பும் - சில

உன்னத பொழுதுகளில்

நீ இதமாய் வருகிறாய்...!


என் மேனியை தொட்டுச் செல்லும்

உன்னிலும் உன்னதம்

தெரிகிறது...!


முடிவாய்;

தென்றலே

நீ புயலாக வருவதை

எப்போது நிறுத்துவாய்???

பதிலாக!!!


என் எல்லா

இரவுகளிலும் படுக்கையில்

பாதியை உன் கனவுகள்

நிறப்புகின்றன உனக்கு பதிலாக;

இன்றும் ஏங்குகின்றேன்

எப்போது நீ வருவாய்

உன் கனவுகளுக்கு

பதிலாகவென்று...!

என் காதலியும் - எல்லா காதலிகளும்


நான் பார்க்கும் போது

என் காதலி - நிலத்தைப் பார்த்தாள்

நான் பார்க்காத போது - என்

காதலி என்னை பார்த்து

மெல்ல சிரித்தாள்...

எல்லா காதலிகளும் இவ்வாறே...

மனதின் மௌனம்...


உன் விழிகள் சொன்ன

வேதங்கள் - இன்னும்

என் மனதில்

மௌன ராகங்கள்...

மரணம் எப்போது???


சிந்தித்து பார்க்க முடியா

தூரத்தில் இருப்பவனே !

சிதைந்த நம் காதலுக்கு

காரணம் - கர்வம் கொண்ட

நம் மனங்கள் மட்டுமே...


இன்று;

உன்னை நினைத்து

உயிர் விருட்சமது

உள்ளிருந்து

ஊமையாய் அழுகிறது...


இதுவரை;

நான் - பிரிவை மட்டுமே

சந்தித்தேன்

இனி - மரணம்

எப்போது???

காதல் தீ


ஏன் விரும்பினாய் என்னை?

ஏன் விதைத்தாய் அன்பை?

ஏன் கேட்டாய் நெஞ்சை

பெற்ற பின் பிரிந்தாய் என்னை?

அழுது நான் ஆறவில்லை

காயமது காயவில்லை

வேகாத நெஞ்சமதில்

விதைத்தாய் நீ - காதல் தீயை

என்று தீரும் - இச் சோகம்

யார் அளிப்பார் ஆறுதலை

பதில் சொல்வார் எவருமில்லை.....

ஆறுதல்...


கடிதமெழுதலும் - கண்ணீர் வடித்தலுமே

என்றாகி விட்டது எனது காதல் !

உரிமையற்ற உனக்காக

ஏங்கும் - இதயத்திற்கு

ஆறுதல் கூற

கண்களின் இடுக்கில்

இருந்து வரும் கண்ணீரே

தயங்குகிறது...!!!

காத்திருந்த கன்னி

காகிதத்தில் செய்த கப்பல்
கடல் நடுவில் தத்தளிக்க !
கன்னியவள் மனமின்றோ
காதலனை எண்ணி எண்ணி !
வருவான் வருவானென்றே
அவள் காலமெல்லாம் காத்திருந்து ...!!!
காதலனும் வந்து விட்டான்
கணவனாக வந்து விட்டான் !
கற்பனையில் வாழ்ந்த கன்னி
கண்டவுடன் அதிர்ந்து விட்டாள் !
விழிகளிலே நீர் சொரிய
மங்கையவள் திகைத்து நின்றாள் !
விடையேதும் புரியாது
வேதனையில் வெந்து நின்றாள்...!!!
வந்தவளோ புது மனவி !
புது மெருகு கலையாது
பூரிப்புடன் புன்னகைத்து நின்றாள்...!!!
இதயக் குமுறல்

உன்னைக் காதலிக்கிறேன்
நம்பு என்று சொன்ன போது
இதயம் ஏற்றுக் கொண்டது - இன்று
இதயம் குமுறுகின்றது - உன்
காதல் பொய்யென்ற போது
நீ கொண்ட அன்பு
இதயத்தில் அல்ல - உடல்
அழகிலும் குரலிலும் என்ற போது
அந்தக் காதலுக்கு
ஆயுள் குறுகிப் போனது...
என் இனியவனே !!

காதல் இதயம் உள்ள நீ
தேன் உள்ள மலர்
உன்னைச் சுற்றும் பெண்கள்
மலர் விட்டு மலர் தாவும்
வண்டுகள் !
உன்னைக் கொட்டும் தேனீக்கள் !
பேதை நான் - உன்னை
இதமாய் தழுவத் துடிக்கும்
காதல் கொண்ட தென்றல் !!!

முடிந்து விட்டது !


உனக்காக வாழ நினைத்தேன் - ஆனால்

நீ எனக்காக இல்லை என்று தெரிந்து கொண்டேன்

நான் எடுத்த ஜென்மம்

இத்தோடு முடிந்துவிட்டது...

மறவேன்...

வந்தாய் வசந்தம் தந்தாய்
சென்றாய் பிரிந்து நின்றாய்
கொன்றாய் என்னை நன்றாய்
கொழுந்தாய் இதயம் எரித்தாய்
அணுவாய் மனதை சிதைத்தாய்
அறிவாய் ஒரு நாள் புரிவாய்
தெரிவாய் என்னை நாடி வருவாய்
கரும்பாய் கவி பல புனைவாய்
மறுப்பாய் என்னை வெறுப்பாய்
முடிவாய் நான் வெறுப்பேன்
மறைவாய் உள்ள நினைவை
கருவாய் காப்பேன் !
மறவேன்.....

காதல் கீதம்...


எத்தனை இரவுகளில் - உனக்காக

விளக்கேற்றி வெளிச்சமாகினேன் !

உதயங்களை எல்லாம் தடுத்து நிறுத்தினேன்

உன் உள்ளம் மலரட்டும் என்று

காலமெல்லாம் உனக்காக காத்திருக்கிறேன்

என் கல்லறையிலாவது காதல் கீதமிசைப்பாய்???

காதல்...

மனித தசைகள் மறத்து போயினும்
மானுட உலகம் மடிந்து போயினும்
மண்ணும் விண்ணும் மறந்திடாத
மறுத்திடாத மகத்தான வார்த்தை
காதல் தான்...


ஒரு உள்ளத்தின் உணர்ச்சியை
ஓசையிடும் மன கிளர்ச்சியை
ஒரு கோடி மௌனத்தால்
உறைக்கும் ஊமை பாஷை
காதல் தான்...


யார் என்ன சொன்னால் என்ன?
கண்ணீரும் கதை சொல்லும்
இந்த காதலின்...!!!

நினைவுகள்...


கொஞம் பேசவும் - கொஞம் எழுதவும்

கொஞம் சிரிக்கவும் நினைக்கிறேன் - ஆனால்

முடியவில்லை - விழித்திரையை மறைக்கும்

நீர்த்திரள்களாய் - உன் நினைவுகள்...

காதலே...

காவிரியாய் ஊற்றெடுத்து
கரைபுரண்டு ஓடுகிறது - என் கண்ணீர்...!!

ஞாபகத் தீக்குள் நாம் நம்மை
மறந்து வாழ்ந்த - ஒவ்வொரு நிமிஷ நினைவும்
வந்து போகிறது...

உணர்ச்சிகளின் - உளறல்களுக்கிடையில்
உனைத் தேடுகிறேன் !!

காதலே
என்னுள் எழுந்த - இத்தனை
ரணமும் உன்னுள்ளும் உள்ளதா???

மறக்க முடியாதவளுக்காக...


உனக்கு என்னை மறந்து போயிருக்கும்

காலப்போக்கில் - எனக்கும் உன்னை மறந்து போகும்

முன்பெல்லாம் - உனக்காக அழுகின்ற போது

கிடைக்கப் போகிறவளுக்காக - அழுகிறேன்

என்றொரு ஆறுதல் இருந்தது.....

இன்று...???


தபால் இல்லாத பிரதேசத்திற்கா நீ

சென்றுவிட்டாய்???

உனக்கொரு கடதாசி எழுதிப்போட

நேரம் இல்லாமல் தான் போய் விட்டதா???


என் வாழ்க்கையை கிழித்து விட்டுப்

போனவளே !!

ஒரு சமூகம் தன் மொழியையே

மறந்து விடும் கவலையோடு

நான் இருக்கிறேன்.....

காதல் நெருப்பு...


நெருங்கவே முடியா தூரத்தில் இருப்பவனே

உன் நினைவுகளை - தினம் தினம் என் கனவுகள்

மறு பரிசீலனை செய்து பார்க்கிறது...


கசப்பான சில நிஜங்களை - ஏற்க மறுக்கும்

என் இதயத்திற்கு - இறுதியாய் ஒரு ஆறுதல்

வார்த்தை - நமக்காக இல்லையாயினும்

நம் காதலுக்காக...!!!

வந்து விடு...


உன்னை அறிந்த முதல் நிமிடம்

என் நினைவை இழந்தேன்...

உன் நிழல் பார்த்ததும்

என் இதயத்தை இழந்து விட்டேன்

உயிரின் முகவரியை - உனக்காக

மாற்றிவிட்டேன்...

உயிர் என்று உன் பெயரை

சேர்த்து விட்டேன் - வந்து சேர்ந்துவிடு

அன்பே - அழுது கொண்டிருக்கிறேன் நான்.....

இது தான் காதல் என்பதா???

இரு உள்ளங்கள் பேசிக்கொள்ளும்
ஊமை பாஷையில் - இதயங்கள்
இடம்மாறி துடிக்கும்
உலக அதிசயங்களில் - ஒன்று தான்
காதல் ...!


அவளுக்காக அவனும்
அவனுக்காக அவளும் - சுவாசிக்கின்றார்களோ
இல்லையோ - நிச்சயமாய்
மனரணங்களின் - ராட்சச தாக்குதலில்
தங்களையறியாமலேயே சிக்குண்டுதவிக்கிறார்கள்...!


இன்றும்;
பாலைவன கொடுமையில்
பல நாள் தனித்திருப்பினும் - இனியகாதல் நினைவுகளை சுமந்து
எத்தனை கோடி ஆண்டுகளும்
இதமாய் இருப்பார்கள்


இது தான் காதல் என்பதா???
வசந்தம் வரும் வரை

உன் நினைவுகள் நொண்டி நொண்டி
நெருப்பின் மேல் - நிற்கச் செய்கின்றன
இருந்தும் காத்திருப்பின் வாசலில்
உனக்காக விழி வைத்திருக்கின்றேன்
முடிவாய் வசந்தத்தை நீ காவிவரும்
காலம் வரை காத்திருப்புக்கள் கரைவதில்லை.....

ஆசை


தத்தித் தாவும் உன் விழிகளில்

நாள் தோறும் ஆயிரம் பாடம்

ஜன்னலோரம் ரசிக்கின்றேன் - நான் அதை !!!


வசந்ததின் வான் வெளியில்

பறக்குதடி என் வாலிபம்

பிழிகிறாய் அதை ஏக்கத்தால்


நான் வாடி நின்றாலும் - என்றும்

வானத்தில் நீ இருந்தாலும் - என்

வாழ் நாள் முழுவதும்

நீ தான் எனக்கேற்ற ஜோடி

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி...

நிலவின் பாதி அவள் நெற்றி
நீண்ட நதியின் பாதி அவள் கூந்தல்
காண்போரை கவரும் கயல் விழி
கண்டவுடன் மயக்கும் அவள் முகம்
காற்றின் கீதம் அவள் வார்த்தை
சங்கீதம் அமைக்கும் அவள் கொழுசொலி
சஞ்சல பட வைக்கும் அவள் நயனம்
அழகின் சொல்லுக்கு அடைக்களம் அவள்........
அரைவாசி மறந்து போனேன்
எனக்கும் மயக்கம் !!!
சின்னஞ் சிறு கண்ணா...

என் விழிகள் பார்க்கும் உன் விழிகளுக்கு
என் காதல் புரியவில்லையா??
இதழ்கள் மட்டுமா காதல் மொழியும் ??
என் விழிகளும் கூட !!
என் விழிகளின் மொழி புரியாத நீ
காதலில் இன்னும் சிறு குழந்தை தான்.....

மரணம்


காதலோடு - என் கனவுகளுக்கும்

கல்லரை கட்டியவனே

மரணம் வந்து போவது

மண்ணக வாழ்வில் ஒரு முறை தான்

என் மன ரணங்களிலேயே

தினம் தினம் மரணித்துபோகும் எனக்கு - கல்லரைகள் தேவையில்லை.....

காதல் பரிசு...

எலும்பினில் கூட என் வாலிபத்தின்
வசந்தங்கள் கருகிப்போன சுவடுகள் தெரிகின்றன..
மலர் கொண்டு வா மாலையாக மணவாசலில்
கூடவல்ல - என் மரணப்படுக்கைக்கு
காதலின் சின்னமாக கடைசியில் படைக்க.....

திருடா !!


உயிருடன் உயிராய்ச் சங்கமித்தவனே

ஒரு முறை நினைத்துப் பார் - என்னையல்ல

எமது பள்ளி வாழ்க்கையை

பல்லாங்குழி ஆட்டங்களை

பழகிப் பண்பான நண்பனாய்

பாசங்காட்டி பறித்து விட்டாய்

பாவியான என் இதயத்தை

திருடியதை மீண்டும் கொடுத்து விட்டு

திருந்தியவனாய் வேடங்கொள்வது

உனக்கே நியாயம் தானா???

காத்திருப்பேன்...

காதலா !!
எங்கிருக்கின்றாய் என்று தெரியாமலே
எதிர்பார்த்து காணாமல் போகிறது - என் இளமை
மட்டுமல்ல, என் எதிர் காலமும் தான்
முடிவாய் - வசந்தத்தை சுமந்து
நீ வரும் வரையில் முற்களை சுமந்து நானிருப்பேன் !!!
மறக்க முடியவில்லை...

உன்னை மறக்க நினைக்கின்றேன் முடியவில்லை
உன் நினைவுகள் வேதனை தந்த போதும்
உருகுபவன் நான் அல்லவா???
ஆனால் - இன்னொருவனை நீ காதலிக்கின்றாய்
என அறிந்த போது நான் நானாக இல்லை !!!
நமக்கு நாமே...

பிறர் சந்தோஷத்திற்காக
நம் காதலை விட்டுக்கொடுத்தோம்
ஆனால்இன்று நாமிருவரும் சந்தோஷமில்லாமல்
தவிக்கின்றோம்
இது நாம் நம் காதலுக்கு செய்த தியாகமா???
இல்லை நம்மை சூழ்ந்திருப்பவர்களுக்கு செய்த தியாகமா???
இரண்டும் இல்லை
இப்போது தான் புரிகிறது
நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டுள்ளோம் என்பது !!!

கனவு !


கண்ணா !

உன்னைக் காண கண்கள் திறந்தேன்

ஓ ! என்ன கொடுமை

நீ அங்கு இல்லையே !

இப்போதல்லவா தெரிகிறது - அது

கனவு என்று !!!

கண்ணே !

கண்ணே !
உன் உயிர் நீந்து விடும்
என்று தெரிந்தும்
இன்னும் நான் உயிர் வாழ்கிறேன்
காரணம்
உன் உயிர் நீங்கும் வரை
உன் மேல் தூசு துரும்பு கூட
விழாமல் உன்னை கண் போல் காக்க!!!
கனாக் கண்டேனடி...

காலை பனித்துளிக்கு
காத்திருக்கும் ரோஜா போல
காத்திருக்கிறேன்
தென்றலாய் வந்து என்னை
தாலாட்டுவாய் என்று
ஆனால் நீயோ
புயலாய் வந்து
என்னை சாய்த்து விட்டாய்
காணாமல் தேடுகின்றேன்...

நீ வாழ்வு தேடிவிட்டாய் - ஆனால்
நானோ வாழ்வு தேடி அழைகிறேன்
என்றும் உன் ஞாபகமாய்
இருக்கும் எனக்கு - நீ நடத்திய நாடகங்கள்
அணைத்தும் போதும் கண்ணே...
உன்னை எதிர்பார்த்து பார்த்து என் கண்கள்
பூத்துப் போனது மட்டும் தான்
மிச்சம் பெண்ணே...

சுகமான சுமை...


இருவரும் காதலித்தோம்

சந்தோஷித்திருந்தோம் - ஆனால் இன்றோ

சேர்வோமா இல்லையா என்ற தவிப்பில்

இருக்கின்றோம்

இதனால் தான் காதலை ஒரு சுகமான சுமை

என்கிறார்களா???

வான்மகள்...

மேக ஊர்வலம் காண ஆகாயம்
தேவையில்லையடி - பெண்ணே
உன் கூந்தல் மட்டுமே
போதுமடி கண்ணே !!!
மன்னிக்க மாட்டாயா???

ஆசையாக நான் வரைந்த கடிதம்
உனக்காக மட்டும் தான் - ஆனால்
அக்கடிதம் உன் கை வரும் போது
நீயோ இன்னொருவனுக்கு
சொந்தமாக இருந்தாய்!!!
செய்த தவறை எண்ணி - இன்றும் நான்
அழுகிறேன் பெண்ணே அழுகிறேன்
என்னை மன்னிப்பாயா???

எதற்காக???


இறைவா

நிலவுக்குள் கலங்கத்தை வைத்தாய் அழகுக்காக

கடலுக்குள் அலையை வைத்தாய் ஆணவத்துக்காக

கருக்குள் மழலையை வைத்தாய் காமத்துக்காக

கரு மேகத்துக்குள் மழையை வைத்தாய் தாகத்துக்காக

மனிதருக்குள் மத வெறியை வைத்தாய் மூட நம்பிக்கைக்காக

அது சரி !!!

எதற்காக என்னவள் இதயத்தை மட்டும் இரும்புக்குள் வைத்தாய்???

மீரா...

காற்றினில் கீதம் இசைத்தேன்
உன்னை தேடுவதற்காக..
என் கீதம் கேட்டு நீ
வருவாய் என காத்திருந்தேன்..
ஆனால்
வந்ததோ
இடி, மின்னல், புயல் தான்..
இருந்தும் பரவாயில்லை
இசைக்கிறேன், இசைத்துக் கொண்டிருக்கிறேன்
உன் வரவிற்க்காக.....

பாரபட்சம்...


இந்த பேதை படும் பாடு

உனக்கேன் புரியவில்லை??

என் இதயத்தின் வலி

உனக்கேன் தெரியவில்லை??

காதலித்தது நாம் இருவரும் தானே...

ஆனால்

வலியும் வேதனையும் எனக்கு மட்டுமா??

உனக்கும் இல்லையா?????

போதுமடி...


ஆயிரம் பொய் சொல்லி ஒரு

கல்யாணம் செய் என்றார்கள் பெரியவர்கள்

ஆனால் !!

காதலில் நான் சொன்ன ஒரு பொய்

நம்மை பிரித்து விட்டது.....

எனக்கு நீ தந்த தண்டனை

போதுமடி கண்ணே

இனியும் என்னால் உன்னை

பிரிந்திருக்க முடியாது பெண்ணே

நீ இல்லையென்றால்...


சுற்றுச் சூழல் குளிர்ந்தாலும்

நீ அருகில் இல்லாவிடில்

அந்த குளிர் கூட

எனக்கு

தாங்க முடியா

வெப்பம் தானடி

வந்து விட்டாள்......


சோகங்கள் மட்டும் தான் எனக்கு

சொந்தம் என்று இருந்தேன் - ஆனால்

சொர்க்கத்தை மட்டும் எனக்கு சொந்தமாக்க

இதோ வந்து விட்டாள் என் தேவதை.....


பாலைவனமாக இருந்த என் நெஞ்சில்

பால் வார்க்க இதோ வந்து விட்டாள் என் தேவதை.....


தேள் கொட்டிய என் இதயத்தில்

தேன் கொட்ட இதோ வந்து விட்டாள் என் தேவதை.....


வால் வீசி கிடந்த என் உள்ளத்தில்

தென்றல் வீச இதோ வந்து விட்டாள் என் தேவதை.....


இருந்தும் என்ன பயன்?????

என் தேவதை வந்தது கனவில் மட்டும் தானே!!!

கண்ணே !!


உன்னை சுகம் கேட்க

நான் தேவையில்லை

என்னை தழுவும் காற்று

போதும் கண்ணே !!!

மறவேன் கண்மணியே...


என் காதல் என்னை

என்ன செய்தாலும்

என் உயிர் உள்ள வரை

என் காதலையும் மறவேன்

உன்னையும் மறவேன்

என் கண்மணியே!!!

கனவைத் தேடி !!


என் கனவில் உன்னைக் கண்ட

நாள் முதலாய் நான் காதலில்

விழுந்து விட்டேன்


உன்னுடன் நடக்கின்றேன்

உன்னுடன் பேசுகின்றேன்

உன்னையே நினைக்கின்றேன்


எல்லாமே கனவில் தான் - இந்த கனவு

எப்போது நிஜமாகும்??

நீ எப்போது என் முன்னாள்

நிஜத்தில் தோன்றுவாய்???

காதல்.....


இதற்கு அர்த்தம் காதலிப்பவர்களுக்கும்

புரியவில்லை...

காதலிக்காதவர்களுக்கும் புரியவில்லை...

ஆனால்,

அதன் உணர்வோ

புரிந்தாலும் வெளியே சொல்ல முடியாத

ஓர் இன்ப உணர்வு !!!

கண்ணாளனே


தொலைந்து போன என் கைக்குட்டையைத்

தேடும் போது தான் தெரிந்தது

தொலைந்தது என் கைக்குட்டை

மட்டுமல்ல - என் மனதும்

தான் என்பது !!!

தவிக்கும் மனம்


என் தவிக்கும் மனம்

உனக்கு புரிய போகின்றதா

என்னை தவிக்க விட்டு

நீ எங்கு சென்றாய்???

உன் வார்த்தைக்கு தவமிருப்பேன் !!


என் இதயமே
என்னிடம் இல்லை என்ற பின்னும்
இன்னுமா உன்னிடம் இறக்கம்
இல்லை???
இருந்தும் ஏனோ இதுவரை
பதிலில்லை.....


மறந்து விடு என்று சொல்வதைவிட
மரணித்து விடு என்று சொல்லிவிடு
மாண்டு போய் செரிந்து
விடுகின்றேன்.....


இன்று நீ என் காதலை மறுக்கின்றாய்
என்றாவது ஒரு நாள் நீ என்
காதலை ஏற்றுக் கொள்வாய்
அப்போ எனக்கு சொல்லி அனுப்பு.....

பிரியமானவனே !!


பிரியமானவனே

நீ பிரிந்து செல்ல போகிறாய் என்றதும்

உதடுகள் மட்டும் உரிமையுடன்

விடை கொடுக்க தயாராகின்றன - ஆனால்

இதயம் மட்டும் பட பட வென

அடித்த படி

போகாதே போகாதே என்று

முனுமுனுத்தபடி

உன் வாசல் பார்த்து

ஏங்கி நிற்கின்றது......

நினைவுக்குளியல் அல்ல நெருப்புக்குளியல் !!


எங்கோ பிறந்து

எங்கோ வளர்ந்து

என்னை கொள்ளை கொண்டாய் !!!

இப்போ

என்றோ உன்னைக் காணுவேன்

என்ற ஏக்கத்தில்

தினம் தினம் உன் நினைவுகளின்

நெருப்பில் நான்

தீ குளிக்கின்றேன் !!!

என் உயிரின் ரகசியம்!!

என் மூச்சுக்காற்றின் - மூலக்கூறின் ஒன்று
உன்னை சேரும் என்பதால்...
சுவாசிக்கின்றேன் !!!
நான் காணும் உருவங்களில்
உன் சாயல் தெரியுமோ என்று தான்
விழித்திருக்கின்றேன் !!!
என்றாவது ஒரு நாள் உன்னைக்
காண்பேன் என்று தான்
உயிர்த்திருக்கின்றேன் !!!

கேளடி கண்மணி..


கண்ணே கேளடி

உன்னை நான் எத்தனை தூரம் காதலிக்கின்றேன்

என்பதை !!!

நான் சொல்லி தான் நீ புரியவில்லை

இந்த கவிஞர்கள் எனக்காக

என் காதலுக்காக எழுதியதையாவது கொஞம் கேளடி !!!

என் காதலை புரிந்துக்கொள்ளடி

திறந்துவிடு கண்ணே !!

காத்திருந்து காலங்கள்
கனவாகி கரையும்முன்னே !!
என் கண்ணீர் வீழ்ந்தது
கடலோடு கலக்குமுன்னே !!
ஓர் மொழி பேசி விடு
உன் மனதினை திறந்து விடு !!
என் வாழ்வின் இனிமையே நீ தான்


வாழ்கை இனிமை தான்
காதலிக்க தெரிந்தவர்களுக்கு
வேலைக்கு பிறகு தான் மாலையென்று
விலை பேசாதே - உன் வாலிபத்தை
வாழ என்னுடன் வா
உன் வெற்றி தோல்வியை சொல்ல
ஒரு நேசம் வேண்டாமா உனக்கு?
நீ குடும்பத்தை தூக்கி நிறுத்த
நானுமோர் துணையாக மாட்டேனா?
நீ என்னுடன் வாழ வந்தால்
வாழ்வில் இனிமை தானே சேரும்!

உனக்கான உன் உறவை மறந்தாயோ???


உன் நினைவை சுமந்து

உன் பெயரை சொல்லி

உன் முகம் காணாமல்

உன் உள்ளத்தைக் காதலித்து

உன் வரவை எதிர்பார்திருக்கும்

என்னை மறந்தாயா???

என்னை ஆள்பவனே !!

என் உயிரே....
நான் சிரித்துக்கொண்டே இருப்பேன்
ரசித்து மகிழ்ந்திட நீ இருந்தால்
நான் அழுது கொண்டே இருப்பேன்
ஆறுதல் கூற நீ இருந்தால்
மறு நொடியே இறந்து விடுவேன்
என்னை மறப்பது நீயாக இருந்தால்

வார்த்தை சுனாமி


உதட்டில் சிரிப்பு - உன்னைக் காணும் போது

இதயதில் வலி - நீ என்னை விட்டு விலகும் போது

இதற்கும் மேலாக

நீ சொன்ன ஒற்றை வார்த்தையில்

என் இதையமே வெடித்தது

அது தான் உன்னை மறந்து விடு என்று.....

உன்னால் தொலைந்தேனடா !!

உன் கண்ணை பார்த்த முதல் நிமிடம் - என்

நினைவை உனக்கு பரிசளித்தேன்

உன் உறவை தேடி அளைகையில் - என்

உயிரை உனக்கு அனுப்பி வைத்தேன்

மௌனம்!!!

சொட்டு சொட்டாய் மண்ணில்
விழுந்திடும் மழைத்துளியே
உங்கள் தாய் மொழி மௌனம் தானோ???
ஊர் ஊராய் ஊர்வலம் போகும் மேகங்களே
உங்கள் தேசிய மொழியும் மௌனம் தானோ???
மன்னவனே!
என் வினாக்களுக்கு உன் விடைகளும் மௌனம் தானோ???
உன் மௌனத்தால் மரணித்து புலம்பும்
மங்கை இவளின் இதயத்தின் காதல் மொழியும்
மௌனம் தானோ???

ஆயுள் வரை!!!


எனக்காக வாழ்ந்த காலங்களை விட

உன்னுடன் கழிந்த அந்த பொழுதுகளே

இனிமையானவை

நீ பிரிந்தாலும் உன் மீது நான் கொண்ட

காதல் போதும் எனக்கு

என் ஆயுள் வரை!!!

சுவாசம்!!!


என் சுவாசம் வெறும் காற்றல்ல

நீ தான் அன்பேசு

வாசதில் கலந்தவனே என் உயிர் மூச்சே

நீ தான் அன்பே

சுவாசமாகி நின்றவனே என் உயிரே

நீ தான் அன்பே

மௌனத்தின் வலி....


பெண்ணே...

வெயிலில் வெந்திருக்கின்றேன்

தீயில் சுட்டிருக்கின்றேன்

அப்போதெல்லாம் ஏற்படாத காயம்

இப்போது ஏற்படுகிறது

உன் மௌனத்தால்!!!

பிரியமானவனே

நாளை உலகம்
இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன???
அன்பே இன்றைய பொழுது
நாமிருவரும் சேர்ந்திருப்பதே
என் ஜென்மத்திற்கும் போதுமே

இதயமே!!!


நீ எங்கு சென்றாலும்

உன் நிழலினை தொடர்ந்து

நான் வருவேன்!!!

நான் நேசிப்பது உன் உள்ளம் மட்டுமே

இரு மனம் சேர்ந்த பின்

யார் என்ன சொன்னால் என்ன

நான் என்றும் உன் தேவதை தான்!!!

உன்னை நினைத்து


நான் உருகுகிறேன்

உருகியது நான் மட்டும் அல்ல

நீயும் தான்

காதலா - நாம் ஆடும் இந்தகண்ணாமூச்சிக்கு முடிவே இல்லையா?படிக்காமலேயே கிழித்து எறியவா

கடிதம் எழுதினோம்?

நமக்குள்ளே நம் காதலை மறைத்து

பொய்யாக வாழும் வாழ்க்கை

போதும் போதும் போதும்

சித்திரைப் பெண்ணே!!!


இது தான் உனக்கு வைக்க வேண்டிய பெயர்

ஆனால் சித்திரைக்கு நான்கு நாட்கள் முன் பிறந்ததால்

உன் பெயர் மாறி விட்டதடி....

பரவாயில்லை

நீ சித்திரைக்கு முன் பிறந்தாலும் சித்திரை போலவே பசுமையும் உஷ்ணமும் நிறைந்தவள்

என்னடா இவன் உளறுகிறான் என நினைக்கின்றாயா???

நான் உளறவில்லை பெண்ணே - நிஜத்தை தான் செப்புகிறேன்

சித்திரை என்றால் பூத்து குலுங்கும் மலர்களும்

காய்த்துக் கனியும் மரங்களும் சித்திரையின் கத்தரி வெயிலும் தான் நினைவில் வரும்

அது போல பல குணங்களைக் கொண்டவள் பெண்ணே நீ

ஆகவே உனக்கு சித்திரைப் பெண்ணே என நான் வைத்த பெயர்

நிஜமானது தானே....

நீயே சொல் நீ பிறந்த நந்நாளில் உனக்காக - இந்த

கிறுக்கன் கிறுக்கிய சில சில கிறுக்கல்கள்!!!!!

காதல்


காதல் புதிதாக இருக்கிறது நமக்கு

ஆனால் நானும் நீயும் ஒருவருக்கு ஒருவர் புதிதல்ல

உன்னுடன் பேசாத இந்த 2 நாட்களும் நான் பட்ட வேதனை

எனக்கு மட்டுமே தெரியும்

இது கூட காதலின் ஒரு பகுதி தான்

இப்போது தான் நான் உன் காதலை உணர்ந்தேன்!!!!!

வீணையடி நீ எனக்கு


அப்படி என்னதான் இருக்கின்றது உன்னிடம் என்று என்னையே இன்னும்

கேட்டுக்கொண்டிருகிறேன் !

விடை தெரிய வேண்டும் எனக்கு !

எப்போதும் சலிக்காத உன் பேச்சு எப்போது சலிக்கிறதென்று பார்க்க

என்னருகே நீ வர வேண்டும்...

எப்போதும்!

கவிதையைப் போல ஒரு வாழ்க்கை காலமெல்லாம் வாழ

கனவிலாவது வர வேண்டும் ...நீ எனக்கு!

வளர்ச்சி


பூமி சுற்றும் வேகத்துக்கு

மனிதனின் ஆற்றல் வளர்கிறது

மனிதனின் வேகத்துக்கு இன்டெர்நெட் வளர்கிறது

இன்டெர்நெட் வேகத்துக்கு காதல் வளர்கிறது

காதல் வளர்ச்சியால் சீதனம் இல்லாத கல்யாணம் !!!

உனக்கான என் நினைவுகள்


அன்பே, நம் நேசங்களின் சுவாசத்தில் வாழ நேசிகின்றேன்

அதற்காக உன்னை நான் காதலிகின்றேன் !

இன்னும் என்ன யோசிக்கின்றாய் எழுந்து வா இரண்டு பேரும் சேர்ந்து சுவாசிப்போம் நம் காதல் தேசத்தில்

உன்னை நோக்கிய விழிகள் என் நோக்கம் மறந்தன

உன்னை நினைத்த நினைவுகள் என் நினைவை இழந்தன

உன்னுடன் சுற்றிய கால்கள் என்னை மறந்தன

இத்தனையும் கூறும் எனக்கு ஒரு காதலி நீ தானடி

உன்னோடு நானிருந்த...


என் வாழ்வின் வசந்தகால நேரங்களெல்லாம்

உன்னோடு நானிருந்த இன்டெர்நெட் நேரம் தானடி
உனக்கு மறந்து போயிருக்கும் உன் முதல் புன்னகை

என் மனசுக்குள் வெப்கேம்மை பார்த்த நேரங்கள்

அந்த நொடி பசுமையாய் என் நினைவில்
பார்வைகள் மட்டும் தானே வெப்கேம்மில் பரிமாறிக் கொண்டோம்

ஆனாலும் எப்படி நீ மொத்தமாய் என்னுள்?

நம் மௌனங்கள் தெளிவாய் பேசிக்கொள்வதை

நாம் சந்தோசமாய் இன்டெர்நெட்டில் பேசுவோம் வா !

திருமணம்

நண்பா!!!!
கல்யாணம் என்பது ஆயுள் தண்டனை இல்லை
அதைக் கண்டு தூர ஓட
கல்யணம் என்பது இரு மனங்களின் சங்கமம்
அந்த இல்லற பந்ததில் கால் வைத்து பார்
அப்போ தெரியும் அதன் பவித்திரம்!!!!!
நண்பணே!!!!

என் கவிதை என்ன
கற்க்கண்டா????
இல்லை
சக்கரைப்பாக????
வேண்டும் வேண்டும் என்று இப்படி
அடம் பிடிக்கும் அளவுக்கா நான் எழுதுகிறேன்???
இருந்தாலும் ஒரு சந்தோஷம்
என்னிடம் கூட கவிதை கேட்க
ஒரு ஜீவன் இவ்வுலகில்
இருக்கிறதே என்று!!!!!
காதல் !!

காதல்
காதலிக்காதவர்களுக்கு அது ஒரு போதை!!!!!
காதலிப்பவர்களுக்கு அது ஒருமாயை!!!!
ஆனால் எனக்கோ
அது வெறும் வார்தை !!!!
வீரம்

காதலிப்பவர்களுக்கு வீரம் வேண்டும் என்று சொல்லும் மூடர்களே
அப்படியென்றால் உங்கள் அகராதியில் வீரம் உள்ள
எல்லாருமே காதலிப்பவர்களா ?????
தங்கை.......

நீ என் உடன் பிறக்கவில்லையே தவிர....
வேரு ஒன்றும் நமக்குள் வித்தியாசம் இல்லையடி கண்ணே
நாம் ஒரு தாய் பிள்ளைகள் இல்லை எனினும் நம் மனது ஒன்று பட்டு விட்டதடி பெண்ணே......
இந்த பூமியில் எது வந்தாலும் உன்னை நான் இறுதி வரை.....
என் நெஞ்சில் வைத்து தாங்குவேணடி பொண்ணே....
உதிரிப்பூக்கள்

உதிரிப்பூவாய் கிடக்கும் என்னை
கோர்த்து மாலையாய் கட்டி
ஏற்றுக்கொள்வாய் - என்று
காத்திருந்த வேளையில்.....
நீயும் வந்தாய் - ஆனால்
என்னை எற்றுகொள்ள அல்ல.....
நீ ஏற்றுக்கொண்ட பெண்ணை
என்னிடம் காட்டுவதற்க்காக.....
அப்போது உதிர்ந்து போய் கிடந்தது
அந்த உதிரிப்பூக்கள் மட்டும் அல்ல....
என் இதயமும் தான்......
கண்ணா....

கண்ணா உன்னைக்கண்டதும் - நான்
காதலையும் கண்டு கொண்டேன்
காதல் கவிதை சொல்ல வந்த நீ
அந்த கவிதையை பாதியிலேயே
விட்டுப் போனதேனோ???
உன்னைப் பற்றி....

இந்த உலகில்
எல்லாமே சிறந்தது என
எண்ணி இருந்த நான்
உன்னைக்கண்டதும் தான்
உணர்ந்தேன் - உன்னை விட
எனக்கு வேறு ஒன்றுமே
பெரிதில்லை என்பதை
காதலனே

கண்ணால் காதல் சொன்னவனே
காவியம் பாட அழைக்கின்றேன் உன்னை - வந்துவிடு
எனக்காக ஒரு தடவை
இருதயம் தாண்டி எண்ணங்களை வளர்ப்போம்!!!!!!
வெண்மதிக்கொரு கடிதம்

வானத்து வென்மதியே
அழைக்கிறேன் உன்னை
என்னோடு கவி பாட அல்ல
என் செண்பகத்துக்கு தூது அனுப்ப
பிரிந்தால் உன்னோடு என் பேச்சு
சேர்ந்தால் வந்துவிடு உறவாடு!!!!!!
பெண்ணே

பெண்ணே சோகங்கள் எல்லாம் சுமையாய் போனாலும்
சுமைகளை எங்கள் வாழ்க்கையில் சுகம் ஆக்குவோம்
வந்துவிடு பெண்ணே
நீ பாதி நான் பாதியாக..